முக்கிய செய்திகள்

பொங்கல் பண்டிகை : சிறப்பு பேருந்துகளுக்கான முன்பதிவு தொடங்கியது..

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சென்னையில் இருந்து சிறப்பு பேருந்துகளில் பயணம் செய்வதற்கான முன்பதிவு இன்று முதல் தொடங்கியது.

பொங்கல் பண்டிகைக்கு மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல ஏதுவாக சிறப்புப்பேருந்துகள் இயக்கப்பட உள்ள நிலையில் அதற்கான முன்பதிவு இன்று தொடங்குகிறது.

வரும் ஜனவரி 14-ம் தேதி போகி பண்டிகையும், 15-ம் தேதி தை பொங்கலும், 16-ம் தேதி மாட்டு பொங்கலும், 17-ம் தேதி காணும் பொங்கலும் கொண்டாடப்படவுள்ளது.

தொடர் விடுமுறை என்பதால் மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல ஏதுவாக ஜனவரி 10 அல்லது 11-ம் தேதியிலிருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது.

இதற்கான முன்பதிவு இன்று முதல் தொடங்கியது.