முக்கிய செய்திகள்

பொங்கல் சிறப்பு பேருந்துகள் முன்பதிவு மைய திறப்பு திடீர் தள்ளிவைப்பு..


போக்குவரத்து தொழிலாளர்கள் வேலைநிறுத்தம் காரணமாக பொங்கல் சிறப்பு பேருந்துகள் இயக்கம் குறித்த கேள்வி எழுந்தது. இந்நிலையில், இன்று சென்னை கோயம்பேட்டில் நடைபெறவிருந்த சிறப்பு பேருந்துகள் முன்பதிவு மையங்கள் தொடக்க விழா திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால் பொங்கலுக்கு சொந்த ஊருக்கு மக்கள் செல்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.