பொன்பரப்பியில் மறு வாக்குப்பதிவு நடத்துவது தொடர்பாக தேர்தல் அதிகாரியை சந்தித்து விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் மனு அளித்தார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், பொன்பரப்பியில் வாக்குப்பதிவு நாளில் தலித் மக்கள் வாக்களிக்க அனுமதிக்கப்படவில்லை என்றும்
தலித் மக்கள் குடியிருக்கும் பகுதியில் வைக்கப்பட்டு இருந்த பானைகள் உடைக்கப்பட்டன என்று கூறினார்.
மேலும் தாக்குதல் காரணமாக தலித் மக்களால் முழுமையாக வாக்களிக்க முடியவில்லை என்றும் பாமக வன்முறையில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டினார்.