முக்கிய செய்திகள்

ஏழைக் குடும்பங்களுக்கும் தொழிலாளர்களுக்கும் நிதியமைச்சரின் அறிவிப்புகளால் எந்தப் பயனும் இல்லை : ப. சிதம்பரம் கருத்து..

“மூன்றாவது, நான்காவது தவணை அறிவிப்புகளில் எதுவுமே இல்லை”

ஏழைக் குடும்பங்களுக்கும் தொழிலாளர்களுக்கும் நிதியமைச்சரின் அறிவிப்புகளால் எந்தப் பயனும் இல்லை என காங்கிரஸ் மூத்த தலைவர் ப. சிதம்பரம் கருத்து தெரிவித்துள்ளார்.

தனது ட்விட்டர் பக்கத்தில் அவர் தெரிவித்ததாவது, ”ஏழைக் குடும்பங்கள், புலம் பெயர்ந்த தொழிலாளர்கள், நாள் கூலி தொழிலாளர்கள், சுய வேலை செய்பவர்கள்,

வேலையிழந்த தொழிலாளர்கள், கீழ்த்தட்டில் உள்ள நடுத்தர மக்கள் ஆகியோருக்கு எந்தப் பயனும் இல்லாத நிதியமைச்சரின் அறிவிப்புகளை நான்கு நாட்களாகக் கேட்டோம்.

மேற்குறிப்பிட்டவர்களுக்கு நிதியமைச்சரின் முதல் தவணை அறிவிப்பில் எதுவுமில்லை.

இரண்டாவது தவணை அறிவிப்பில் புலம் பெயர்ந்து திரும்பியவர்களுக்குத் தலா 10 கிலோ தானியத்திற்கு ரூ 3500 கோடி மட்டுமே. மூன்றாவது, நான்காவது தவணை அறிவிப்புகளில் பூஜ்யம்.

வாழ்க இந்திய ஜனநாயகம்!”

இவ்வாறு அவர் கூறினார்.
ஏழைக் குடும்பங்கள், புலம் பெயர்ந்த தொழிலாளர்கள், நாள் கூலி தொழிலாளர்கள், சுய வேலை செய்பவர்கள், வேலையிழந்த தொழிலாளர்கள்,

கீழ்த்தட்டில் உள்ள நடுத்தர மக்கள் ஆகியோருக்கு எந்தப் பயனும் இல்லாத நிதியமைச்சரின் அறிவிப்புகளை நான்கு நாட்களாகக் கேட்டோம்