சாமானிய மக்களே பொருளாதாரத்தை நிலை நிறுத்துவார்கள் : நோபல் வென்ற பொருளாதார அறிஞர் அபிஜித் பானர்ஜி பேட்டி!..

சாமானிய மக்களே பொருளாதாரத்தை நிலை நிறுத்துவார்கள் என நோபல் வென்ற பொருளாதார அறிஞர் அபிஜித் பானர்ஜி கூறியுள்ளார்.
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக சீனாவில் இருந்து பல்வேறு பன்னாட்டு நிறுவனங்கள் வெளியேறி வருகின்றன.

இதன் காரணமாக இந்தியா உள்ளிட்ட வளரும் நாடுகளில் பன்னாட்டு நிறுவனங்கள் தங்களது தொழிற்சாலைகளை கட்டமைத்து வளங்களை பெருக்கும் என கருத்து நிலவுகிறது.

இது தொடர்பாக பேசியுள்ள பொருளாதாரத்துறையில் நோபல் விருது பெற்ற அபிஜித் பானர்ஜி, பணக்காரர்களால் நாட்டின் உள்நாட்டு உற்பத்தி எனப்படு ஜிடிபி உயராது. அது சாமானிய மக்களால் மட்டுமே முடியும் எனக் கூறியுள்ளார்.
உலகின் பல்வேறு நாடுகள், உள்நாட்டு உற்பத்திக்கு என கணிசமான பங்கை ஒதுக்கிவைக்கின்றன. ஆனால், இந்தியாவில் மத்திய அரசு அதனை செய்யவில்லை. சீன அரசு தனது யுவான் கரன்சியின் மதிப்பை குறைத்துவிட்டால் பன்னாட்டு நிறுவனங்கள் மீண்டும் சீனாவை நோக்கிதான் செல்லும் என்பதை மனதில் கொள்ளவேண்டும்.

ஆகையால், கொரோனா போருக்கு பிறகு இந்தியா பலவகையில் பயன்பெறும் என்றக் கருத்தில் உண்மைத்தன்மை இல்லை. ஆகவே, இந்தியாவின் பொருளாதாரடம் சீராவதற்கு ஏழை எளிய மக்களிடம் பணத்தை கொடுத்து வாங்கும் சக்தியை பெருக்குவதே நன்மைபயக்கும்.

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியுடனான கலந்துரையாடலின் போதும், அபிஜித் பானர்ஜி இதேப்போன்ற கருத்துகளையே முன்வைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

சென்னை ஆளுநர் மாளிகை தீயணைப்பு வீரருக்கு கரோனா பாதிப்பு உறுதி..

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வையே இரத்து செய்க : வைகோ வலியுறுத்தல்

Recent Posts