
முதுநிலை மருத்துவ படிப்புகளுக்கான கலந்தாய்வை நடத்தவேண்டாம் என மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது.
பொருளாதார ரீதியாக பின் தங்கியவர்களுக்கு ஆண்டு வருமானம் ரூ.8 லட்சம் என நிர்ணயித்ததற்கு நீதிமன்றம் எதிர்ப்பு தெரிவித்திருந்தது. அதனால் பொருளாதார ரீதியில் பின்தங்கியவர்களுக்கான இட ஒதுக்கீடு பற்றி நீதிமன்றம் முடிவு செய்தபிறகே கலந்தாய்வை நடத்த வேண்டும் என்று மத்திய அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.