முக்கிய செய்திகள்

தோனியிடம் என்ன கேட்டேன் தெரியும்ல…: ப்ரீத்தி ஜிந்தா விளக்கம்

தோனியிடம் தாம் பேசியது குறித்து பாலிவுட் நடிகையும், பஞ்சாப் ஐபிஎல் அணியின் உரிமையாளருமான ப்ரீத்தி ஜிந்தா விளக்கமளித்துள்ளார்.

கடந்த மே 5-ஆம் தேதி, மொஹாலியில் பஞ்சாப் அணிக்கும் சி.எஸ்.கே வுக்கும் இடையே ஐபிஎல் 55-வது போட்டி நடைபெற்றது. இதில் பஞ்சாப் அணி சென்னையை வீழ்த்தி ஆறு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. இருப்பினும் பஞ்சாப் அணி ப்ளே-ஆஃப் சுற்றுக்குத் தகுதிபெறவில்லை. 

அன்று போட்டி முடிந்ததும் பஞ்சாப் அணியின் உரிமையாளரும் நடிகையுமான ப்ரீத்தி ஜிந்தா சென்னை அணியின் கேப்டன் தோனியிடம் கைகுலுக்கிப் பேசிய புகைப்படம் வெளியாகி வைரல் ஆனது. வெவ்வேறு அணியைச் சேர்ந்த வீரர்கள் சகஜமாகப் பேசிக்கொள்வது வழக்கம்தான். அனால் உரிமையாளர் அப்படி சகஜமாக விளையாட்டு மைதானத்தில் பேச மாட்டார்கள் என்பதால் அந்த புகைப்படம் வைரல் ஆனது.

அதற்கு தற்போது ப்ரீத்தி ஜிந்தா தோனியுடன் அன்று என்ன பேசினேன் என்று விளக்கம் அளித்துள்ளார். தனது ட்விட்டர் பக்கத்தில் இதுபற்றி குறிப்பிட்டுள்ள அவர், அதில் கேப்டன் கூல் தோனிக்கு இருக்கும் ரசிகர்களில் நானும் ஒருத்தி, அனால் எனக்கு அவரது குட்டிப் பெண் ஜீவாவைப் பார்த்தல் அது போய்விடுகிறது. அவரிடம் கவனமாக இருங்கள், நான் அவளை ஒரு நாள் கடத்திச் சென்று விடுவேன் என்று கூறியதாகத் தெரிவித்துள்ளார்.

சென்னையில் இன்று ப்ளே-ஆஃப் சுற்றின் முதல் போட்டியான குவாலிஃபையர் 1-இல் சென்னை அணியும் மும்பை அணியும் இரவு 7:30க்கு மோதுகின்றன. இதில் வெற்றிபெறும் அணி நேரடியாக ஃபைனலுக்கு சென்றுவிடும்.