முக்கிய செய்திகள்

குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் தமிழகம் வருகை..


குடியரசுத் தலைவராக பதவியேற்ற பின் முதன்முறையாக ராம்நாத் கோவிந்த் தமிழகம் வந்துள்ளார். மதுரை விமான நிலையம் வந்த குடியரசுத் தலைவர் ராம்நாத்தை ஆளுநர் பன்வாரிலால் வரவேற்றார்.

குடியரசுத் தலைவர் ராம்நாத்தை அமைச்சர்கள் செல்லூர் ராஜூ, ஆர்.பி.உதயகுமார், ஆட்சியரும் வரவேற்றனர். மதுரையில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் ராமேஸ்வரம் செல்கிறார் குடியரசு தலைவர்.