முக்கிய செய்திகள்

தனியார் மருத்துவமனைகள் கட்டணமின்றி கரோனா பரிசோதனை: உச்ச நீதிமன்றம் உத்தரவு..

கரோனா வைரஸ் நோய்த் தொற்றுக்கான பரிசோதனையை கட்டணமின்றி பரிசோதிக்க உச்ச நீதிமன்றம் இடைக்கால உத்தரவைப் பிறப்பித்துள்ளது.

கரோனா வைரஸ் நோய்த் தொற்றுக்கு எதிராக இந்தியா தீவிரமாக செயல்பட்டு வருகிறது. இந்த நோய்த் தொற்றுக்கான பரிசோதனையை மேற்கொள்ள ரூ. 4,500ஐ உச்ச வரம்பாக நிர்ணயித்து மத்திய அரசு உத்தரவிட்டது.

இந்நிலையில், கரோனா தொற்று பரிசோதனையை கட்டணமில்லாமல் இலவசமாக பரிசோதிப்பதற்கான அரசாணையை பிறப்பிக்க வேண்டும் என மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.