முக்கிய செய்திகள்

ராகுல் இந்தியராவா… இது என்ன அறிவீனமான கேள்வி: கொந்தளித்த பிரியங்கா

ராகுல் காந்தி இந்தியாவிலேயே, இந்த நாட்டின் குடிமகனாக பிறந்து வளர்ந்தவர் என்பதை நாட்டு மக்கள் நன்கு அறிவார்கள் என பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார்.

ராகுல் காந்தியின் குடியுரிமை குறித்து சுப்பிரமணியன் சுவாமி அளித்த புகாரின் அடிப்படையில், மத்திய குடியுரிமை அமைச்சகம் சார்பில் அவருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டிருந்தது. இங்கிலாந்தைச் சேர்ந்த நிறுவனத்தின் வரவு செலவு கணக்கு தாக்கல் செய்யப்பட்ட போது. ராகுல் காந்தி பிரிட்டன் குடியுரிமை பெற்றவர் எனத் தெரிவிக்கப்பட்டிருப்பதாக கூறி, இந்த நோட்டீஸ் அனுப்பப்பட்டிருந்தது.

இது குறித்து,  டெல்லியில் பிரியங்கா காந்தியிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு சூடாக பதிலளித்த பிரியங்கா,  “நாட்டு மக்கள் அனைவருக்குமே ராகுல் காந்தி இங்குதான் பிறந்து வளர்ந்தார் என்பது தெரியும். அப்படி இருக்கும் போது இப்படி ஒரு கேள்வியை எழுப்புவது அறவீனமானது” என கூறினார்.