முக்கிய செய்திகள்

பிரச்சாரத்தை தொடங்கினார் பிரியங்கா: களை கட்டும் உ.பி… கலக்கத்தில் பாஜக கூடாரம்

காங்கிரஸ் கட்சியில் புதிதாக பொறுப்பு வழங்கப்பட்ட பிரியங்கா, உத்தரப்பிரதேச மாநிலத்தில் இன்று பிரச்சாரத்தைத் தொடங்கினார்.

உத்தர பிரதேச மாநிலத்தின் கிழக்கு பகுதி காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளராக பிரியங்கா காந்தி அண்மையில் நியமிக்கப்பட்டார். இதையடுத்து, இன்று லக்னோவில் அவர் பிரச்சாரத்தை தொடங்கினார். பிரியங்காவுடன் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, ஜோதிராத்யா சிந்தியா ஆகியோரும் உடன் பங்கேற்றனர்.

ராகுல் மற்றும் சோனியா காந்தி போட்டியிட்டு வெற்றி பெற்ற அமேதி மற்றும் ரேபரேலியைத் தவிர்த்து, வேறு ஒரு தொகுதியில் பிரியங்கா காந்தி பிரச்சாரத்தில் ஈடுபட்டிருப்பது இதுவே முதல் முறை.

பிரியங்காவைப் பார்க்க மக்கள் பெருந்திரளாக கூடுவதால், அங்கு ஆளும் பாஜக அதிர்ச்சியடைந்திருக்கிறது. ஏற்கனவே, யோகி ஆதித்யா நாத் அரசின் மீடு கடும் அதிருப்தி நிலவி வரும் நிலையில், பிரியங்காவின் பிரச்சாரம் காங்கிரசுக்கு பெருமளவு கை கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.