முக்கிய செய்திகள்

தயாரிப்பாளர்கள் சங்க நிர்வாகத்திற்கு எதிராக செயல்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் : விஷால்..

தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்க நிர்வாகத்திற்கு எதிராக செயல்பட்டவர்கள் மீது செயற்குழுவை கூட்டி நடவடிக்கை எடுக்கப்படும் என விஷால் தெரிவித்துள்ளார்.

சென்னை அண்ணாசாலையில் உள்ள தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க பூட்டு திறக்கப்பட்ட பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,

தயாரிப்பாளர் சங்க விவகாரத்தில் நீதிமன்றம் நல்ல தீர்ப்பு வழங்கியிருப்பதாகத் தெரிவித்தார்.

இளையராஜா நிகழ்ச்சிக்கு ஏன் எதிர்ப்பு தெரிவிக்கப்படுகிறது என புரியவில்லை என்ற அவர், அவரை பெருமைப்படுத்துவது தங்கள் கடமை என்றும்,

நிச்சயம் நிகழ்ச்சி நடத்தப்படும் என்றும் தெரிவித்தார். இளையராஜா நிகழ்ச்சிக்குப் பின் பொதுக்குழு கூட்டப்படும் என்றும் கூறினார்.