பள்ளி கல்வித்துறையின் டிபிஐ வளாகத்துக்கு க.அன்பழகன் பெயர் வைக்கப்பட்ட கல்வெட்டு மற்றும் வளைவை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
பேராசிரியர் அன்பழகனின் நூற்றாண்டு நினைவைப் போற்றும் வகையில் தமிழ்நாடு அரசின் பள்ளிக் கல்வித் துறை செயல்படும் DPI வளாகத்தில் பேராசிரியர் அன்பழகன் சிலை நிறுவப்பட்டு, அவ்வளாகம் “பேராசிரியர் அன்பழகன் கல்வி வளாகம்” என்றும் அழைக்கப்படும். சிறந்த பள்ளிகளுக்கு பேராசிரியர் பெயரில் விருதும் வழங்கப்படும் என்றும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஏற்கனவே அறிவித்து இருந்தார்.
இந்நிலையில் மறைந்த திமுக பொதுச் செயலாளர், தமிழக முன்னாள் அமைச்சர் பேராசிரியர் அன்பழகனின் 101 பிறந்தநாள் இன்று (டிச.19) கொண்டாப்படுகிறது. இதனை முன்னிட்டு சென்னை, நுங்கம்பாக்கத்தில் உள்ள பள்ளிக்கல்வித்துறை அலுவலக வளாகத்திற்கு “பேராசிரியர் அன்பழகன் கல்வி வளாகம்” என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் பெயர் சூட்டினார். மேலும்
பேராசிரியர் க.அன்பழகன் நூற்றாண்டு வளைவு மற்றும் அன்பழகன் கல்வி வளாக கல்வெட்டை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.