குடியேற்றச் சட்டம்: அமெரிக்காவில் ட்ரம்பிற்கு வலுக்கும் எதிர்ப்பு!

மெக்சிகோவில் இருந்து அகதிகளாக தஞ்சமடையும் பெற்றோரின் குழந்தைகளைப் பிரித்துவைக்கும் அதிபர் ட்ரம்பின் குடியேற்றச் சட்ட நடைமுறைக்கு எதிராக அமெரிக்கா முழுவதும் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். லாஸ் ஏஞ்சல்ஸ், பாஸ்டன் உள்ளிட்ட பெருநகரங்களிலும், மாகாணங்களின் தலைநகர்களிலும்,  சிறு நகரங்களிலும் பெருந்திரளான மக்கள் பேரணி மற்றும் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டனர். நியூயார்க்கில் வெள்ளை மாளிகையை நோக்கியும் பொதுமக்கள் பேரணியாக சென்று தங்களது எதிர்ப்பைக் காட்டினர்.  அமெரிக்கா முழுவதும் ஆட்சியாளர்களுக்கும், அதிபருக்கும் எதிராக இத்தனை பெரிய போராட்டம் அண்மைக்காலத்தில் நடைபெற்றதில்லை என அமெரிக்காவில் இருந்து வெளியாகும் ஏடுகள் கூறுகின்றன. மெக்சிகோவில் இருந்து எல்லை வழியாக அமெரிக்காவுக்குள் நுழையும் பெற்றோரிடமிருந்து குழந்தைகளைப் பிரித்து வைக்கும் புதிய குடியேற்றச் சட்டத்தை அதிபர் ட்ரம்ப் அண்மையில் அமல் படுத்தினார்ய. இதன் மூலமமாக 5 வயதுக்குட்பட்ட 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குழந்தைகளை, அமெரி்கக குடியேற்றத்துறை அதிகாரிகள் பிரித்து முகாம்களுக்குள் அடைத்து  வைத்துள்ளனர். அவர்களை உடனடியாக பெற்றோரிடம் சேர்த்து வைக்கும் படி நீதிமன்றம் உத்தரவிட்ட பின்னரும் பல்வேறு காரணங்களைக் கூறி, அதனை ட்ரம்ப் நிர்வாகம் தவிர்த்து வருகிறது. ட்ரம்பின் மனைவி மெலானியாவே எதிர்ப்புத் தெரிவித்த பின்னரும் கூட ட்ரம்ப் அதனை முழுமையாக கைவிடத் தயாராக இல்லை. இதனால், அமெரிக்க மக்கள் அதிபருக்கு எதிராகவும் , அவரது குடியரசுக் கட்சி அரசுக்கு எதிராகவும் போராட்டத்தில் குதித்துள்ளனர்.

 

Protesters flood US cities against Trump’s immigration policy