பி.எஸ்.எல்.வி சி-42 வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது.

ஆந்திர மாநிலம், ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ்தவான் விண்வெளி ஆராய்ச்சி மையத்தி லிருந்து, 2 செயற்கைகோளுடன் பி.எஸ்.எல்.வி சி 42 ராக்கெட் விண்ணில் ஏவப்பட்டது.

இது இந்தியாவின் 44-வது பி.எஸ்.எல்.வி. ராக்கெட் என்பது குறிப்பிடத்தக்கது. வர்த்தக பயன்பாட்டுக்காக இந்த ராக்கெட் ஏவப்பட்டுள்ளது.

வணிக நோக்கத்திற்காக விண்ணில் செலுத்தப்பட்ட பி.எஸ்.எல்.வி சி-42 வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது.

வணிக நோக்கத்துடன் இங்கிலாந்தின் நோவா எஸ்.ஏ.ஆர். எஸ்.ஓன் போர் செயற்கைகோளை விண்ணில் ஏவியது

இஸ்ரோவின் சார்பில் விண்ணில் ஏவப்படும் 44-வது பிஸ்.எல்.வி ராக்கெட் ஆகும்.

இதற்கான கவுண்டவுன் நேற்று பிற்பகல் 1.08 மணிக்கு துவங்கியது.விண்ணில் செலுத்தப்பட்ட 17-வது நிமிடத்தில் முதல் செயற்கைகோள் நிலை நிறுத்தப்பட்டது.

2 செயற்கைகோள்களும் நிலபரப்பு ஆய்வு, பேரிடர் கால கண்காணிப்பு, கடல்வழி போக்குவரத்தை கண்காணிக்கும். நோவா செயற்கை கோள் 445 கிலோ எடை கொண்டது. எஸ்-1-4 செயற்கைகோள் 444 கிலோ எடை கொண்டது.

17 நிமிடம் 45 வினாடிகளில் பி.எஸ். எல்.வி-சி-42 ராக்கெட் மூலம் விண்ணில் ஏவப்பட்ட இரு செயற்கைகோள்கள் வெற்றிகரமாக நிலை நிறுத்தப்பட்டன.

2 செயற்கைகோள்களும் பூமியிலிருந்து 583 கி.மீ தொலைவில் புவி சுற்றுவட்டப்பாதையில் நிலைநிறுத்தப்பட்டன.

பிரதமர் மோடி பாராட்டு : 2 செயற்கைக்கோள், வெற்றிகரமாக நிலைநிறுத்ததிய இஸ்ரோவுக்கு மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.

வணிகரீதியாக செயற்கைக்கோள்கள் அனுப்புவதில் இந்தியாவின் வல்லமையை உலகிற்கு உணர்த்தியுள்ளது

தமிழகம்,புதுவை மீனவர்களுக்கு வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..

தந்தை பெரியாரின் 140-வது பிறந்த தினம் : மு.க.ஸ்டாலின் மரியாதை..

Recent Posts