காரைக்குடி செய்தியாளர் சநதிப்பின் போது சிவகங்கை மாவட்ட பாஜக தலைவர் மேப்பல் சக்திநாதன் பேசும் போது தேர்தல் அறிக்கை மக்களின் கோரிக்கைகளை வலியுறுத்திதான் இருக்கும் என்றார்.
மக்களின் கோரிக்கை அடிப்படை தேவைகள் என்ன என்பதை அரிய நாளை முதல் கிராமங்கள் தோறும் பாஜக சார்பில் பெட்டிகள் வைக்கப்படும் மக்கள் அதில் தஙகள் கோரிக்கைகளை எழுதிப் போடடால் அதுவே மாவட்ட தேர்தல் அறிக்கையாக வரும்.
காரைக்குடி ரயில் சந்திப்பு 17 கோடி செலவில் விரிவாக்க பணிகள் தொடங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
வீட்டுக்கு குடிநீர் இணைப்பு திட்டமான ஜலசக்தி திட்டத்தை மாநில அரசு பெயர் போட்டுள்ளதாக குற்றம் சாட்டினார்.
வரும் மக்களவை தேர்தலில் சிவகங்கையில் பாஜக போட்டியிடும்,கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கி விட்டாலும் வெற்றிக்கு பாடுபடுவோம் என்றார்.