பொதுத்துறை நிறுவனங்களை எல்லாம் தனியார் மயமாக்கி வேலைவாய்ப்பை அழிக்கும் மத்திய அரசு: ராகுல் காந்தி விமர்சனம்…

ராகுல் காந்தி

பொதுத்துறை நிறுவனங்களை எல்லாம் தனியார் மயமாக்கி வரும் மத்திய அரசு, இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பையும் அழித்து வருகிறது என காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி விமர்சித்துள்ளார்.
இந்தியாவின் 2-வது பெரிய எரிபொருள் சில்லரை விற்பனை நிறுவனமும், 3-வது பெரிய சுத்திகரிப்பு நிறுவனமுமான பிபிசிஎல் நிறுவனத்தில் மத்திய அரசிடம் உள்ள 52.98 சதவீத பங்குகளை விற்பனை செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
இந்த அறிவிப்புக்கு எதிராக காங்கிரஸ் எம்பி., ராகுல் காந்தி விமர்சனம் செய்துள்ளார். ‘

டுவிட்டரில் அவர் பதிவிட்டுள்ளதாவது; இன்று, இந்த நாடு மோடி அரசால் உருவாக்கப்பட்ட பல்வேறு பேரழிவுகளைச் சந்தித்து வருகிறது.
இதில் தேவையில்லாத இந்த தனியார்மயமாக்கலும் ஒன்று. இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு தேவை. ஆனால், மோடி அரசு வேலைவாய்ப்பை அழித்து வருகிறது,
பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு தாரைவார்த்து வருகிறது. இந்தத் தனியார் மயமாக்கலால் மோடிக்கு நெருக்கமாக இருக்கும் சில நண்பர்கள் மட்டுமே இதனால் பயன் அடைவார்கள். தனியார் மயமாக்கலை நிறுத்துங்கள், அரசு வேலைவாய்ப்பை பாதுகாப்போம். இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.

கரோனா பரிசோதனைக்கு 2,000 மினி கிளினிக் : முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு..

திமுக-வில் சட்ட திருத்தம் ஆ.ராசா, பொன்முடிக்கு துணை பொதுச்செயலாளர் பதவி?…

Recent Posts