முக்கிய செய்திகள்

புதுச்சேரியில் முழு கடையடைப்பு போராட்டம்..

புதுச்சேரியில் வரிஉயர்வை கண்டித்து இன்று (பிப்.20) காலை 6 மணி முதல் நாளை காலை 6 மணி வரை முழு கடையடைப்பு போராட்டம் நடத்தப்படுகிறது. தொழில்உரிம கட்டண வரி, தொழில் வரி, வணிக வளாக வரி உள்ளிட்ட வரிகள் உயர்த்தியதை திரும்ப பெற வலியுறுத்தி கடையடைப்பு நடத்தப்படுகிறது. கடையடைப்பை முன்னிட்டு திரையரங்குகளில் பகல் காட்சி ரத்து செய்யப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

காரைக்காலிலும் முழுயடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது