முக்கிய செய்திகள்

புதுச்சேரி துணை நிலை ஆளுநரை திரும்ப பெற வேண்டும் : மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்

புதுச்சேரி துணை நிலை ஆளுநரை திரும்ப பெற வேண்டும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:–

புதுச்சேரி அரசின் அதிகாரத்தில் தலையிடுவதற்கு துணை நிலை ஆளுநருக்கு அதிகாரம் இல்லை என்று உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்புக்கு உச்சநீதிமன்றம் தடை விதிக்க மறுத்து இருப்பது வரவேற்கத்தக்கது.

அரசியல் சட்டத்துக்கு விரோதமாக செயல்பட்ட புதுச்சேரி துணை நிலை கவர்னரை உடனே திரும்ப பெற வேண்டும்.