முக்கிய செய்திகள்

புதுவை 100 அடி சாலைக்கு கருணாநிதி பெயர் : அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு..

புதுவையில் முதலமைச்சர் நாராயணசாமி தலைமையில் நேற்று அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன. இதுபற்றி முதலமைச்சர் நாராயணசாமி கூறியதாவது:-

புதுச்சேரியில் இந்திரா காந்தி சதுக்கம் முதல் ராஜீவ் காந்தி சதுக்கம் வரையிலான 100 அடி சாலைக்கு மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் பெயரை சூட்ட அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதுதவிர காரைக்கால் பிராந்தியத்தில் உள்ள திருநள்ளார் பைபாஸ் சாலை மற்றும் பட்டமேற்படிப்பு மையம் ஆகியவற்றுக்கும் கருணாநிதி பெயர் சூட்ட முடிவு செய்யப்பட்டது.

பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தில் கருணாநிதி பெயரில் இருக்கை அமைக்கப்படும்.

புதுச்சேரியின் 4 பிராந்தியங்களிலும் உள்ள குளங்கள் மற்றும் கால்வாய்களை தூர்வார அரசு முடிவு செய்துள்ளது.

எனவே, பொதுமக்கள் தங்கள் வீடுகளுக்குத் தேவையான மணலை அங்கிருந்து வாங்கிக் கொள்ளலாம்.

இதற்காக மாட்டு வண்டி ஒரு லோடுக்கு 50 ரூபாய் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. டிராக்டருக்கு 100 ரூபாய், லாரிக்கு 150 ரூபாய் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

இந்த தொகை கொம்யூன் பஞ்சாயத்து வளர்ச்சிக்காக வழங்கப்படும்