புதுவையில் குடும்பத்துக்கு ரூ.1000 தீபாவளி பரிசு வழங்கப்படும் என புதுச்சேரி அமைச்சரவை கூட்டத்துக்கு பின் முதலவர் நாராயணசாமி அறிவித்துள்ளார்.
ரேஷன்கார்டு வைத்து உள்ள ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ. 1000 பரிசு வழங்கப்பட்டும் என்று தெரிவித்தார்.
புதுவையில் தீபாவளியை ஒட்டி இலவச வேட்டி, சேலை வழங்கப்படுவது நடைமுறையில் உள்ளது.
ஆனால் இந்த ஆண்டு இலவச வேட்டி, சேலை பற்றிய அறிவிப்பை புதுவை அரசு வெளியிடவில்லை.
வேட்டி, சேலையை கொள்முதல் செய்ய அவகாசம் இல்லாததால் பணமாக தரக்கோரி எதிர்க்கட்சியினர் கோரிக்கை வைத்திருந்தனர்.
எதிர்க்கட்சியினர் கோரிக்கையை ஏற்று கொண்டு குடும்பம் ஒன்றுக்கு ரூ.1000 வழங்க முதல்வர் முடிவு செய்துள்ளனர்.
முன்னதாக புதுவை அரசு தொழிலாளர் துறை, அமைப்புசாரா தொழிலாளர் நலச்சங்கம் ஆகியவற்றில் பதிவு செய்துள்ள 30,000 தொழிலாளர்களுக்கு தீபாவளி பரிசுகூப்பன் ரூ. 1000 வழங்கப்பட்டது.
இதனை அமைச்சர் கந்தசாமி தலைமை தாங்கி தொழிலாளர்களுக்கு பரிசு கூப்பனை வழங்கினார்.
இந்நிலையில் புதுவையில் குடும்பத்துக்கு ரூ.1000 தீபாவளி பரிசு வழங்கப்படும் என புதுச்சேரி முதலவர் நாராயணசாமி அறிவித்துள்ளார்.