முக்கிய செய்திகள்

பஞ்சாப் நேஷனல் வங்கியின் 18,000 ஊழியா்கள் இடமாற்றம்..


நாடுமுழுவதும் உள்ள பஞ்சாப் நேஷனல் வங்கி கிளைகளில் பணியாற்றி வந்த 18 ஆயிரம் ஊழியா்கள் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தேசிய வங்கி ஊழியா் கூட்டமைப்பு தொிவித்துள்ளது.

பஞ்சாப் வங்கியின் மும்பை கிளையில் நடைபெற்ற 11 ஆயிரத்து 300 கோடி ரூபாய் ஊழல் நாட்டையே உலுக்கியது. இதனைத் தொடா்ந்து கடந்த திங்கள் கிழமை மத்திய கண்காணிப்பு ஆணையம் சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டது. சுற்றறிக்கையில் நாடுமுழுவதும் உள்ள பொதுத்துறை வங்கிகளில் எந்தவொரு அதிகாாியும் குறிப்பிட்ட ஒரு பதவியில் மூன்று ஆண்டுகளுக்கு மேல் பதவி வகிக்கக்கூடாது அதேபோல் குறிப்பிட்ட நகராட்சி எல்லைக்குள்ளும் ஐந்து வருடங்களுக்கு மேல் பணிபுாியக் கூடாது என்று தொிவிக்கப்பட்டது.

அதன்படி நாடுமுழுவதும் பஞ்சாப் நேஷனல் வங்கியின் 7 ஆயிரம் கிளைகளில் 18 ஆயிரம் போ் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனா். இந்த அளவு அந்த வங்கியின் மொத்த பணியாளா்களில் 25 சதவீதம் என்பது குறிப்பிடத்தக்கது. ரூ.11 ஆயிரத்து 300 கோடி ஊழல் நடைபெற்ற ப்ரடி ஹவுஸ் கிளை மேலாளரான கோகுல்நாத் ஷெட்டி அக்கிளையில் ஏழு வருடங்களாக பணியாற்றி வந்திருந்தாா் என்பது தொியவந்துள்ளது.