முக்கிய செய்திகள்

பஞ்சாப் நேஷனல் வங்கியின் மும்பை கிளையில் மற்றொரு மோசடி அம்பலம்..


பஞ்சாப் நேஷனல் வங்கியின் மும்பை கிளையில் மற்றொரு மோசடி நடந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. மும்பை கிளையில் சுமார் ரூ.9.9 கோடியை சட்டவிரோத பணப் பரிமாற்றம் செய்திருப்பதாக காவல்துறையிடம் புகார் அளித்துள்ளனர். இதனையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். நாட்டின் இரண்டாவது பெரிய வங்கியான பஞ்சாப் நேஷனல் வங்கியின் மும்பை கிளையில் ரூ.11,500 கோடி மோசடி நடந்ததது சமீபத்தில் தெரிய வந்தது குறிப்பிடத்தக்கது.