இந்த வாரம் நம் ஆரோக்கிய வாழ்வியலில் இதயம் குறித்துப் பார்ப்போம்.
இளகின இதயம் என்றாலும் கல்நெஞ்சு என்றாலும் இதயத்தின் ஒழுங்கான இயக்கமே நம் இருப்பின் அடையாளம் என்றாகிறது. ஆனால் இன்றைய வாழ்வியல் முறையில் அதிகம் பாதிக்கப்படுவது இதயம் தான். முறையற்ற உணவுப்பழக்கம், போதுமான உடற்பயிற்சியின்மை, சரியான தூக்கமின்மை, உடலைவிட மூளைக்கு அதிக வேலை என்று பரபரப்பான வாழ்க்கை முறை. இந்த சூழ்நிலையை மொத்தமாக மாற்ற முடியாவிட்டாலும் நிறைய மாற்றங்களை செய்து கொண்டால் மட்டுமே மற்றவர்களிடம் அன்பும் கருணையும் காட்டும் நம் இதயம் நன்றாக இருக்கும்.
மனசு கஷ்டமாக இருந்தாலும் சந்தோஷமாக இருந்தாலும் அதை சரி பண்ணுவதாக அல்லது கொண்டாடுவதாக கூறிக்கொண்டு உண்ணும் உணவுகளில் முக்கியமானது இனிப்பு. பெரும்பாலும் இனிப்பு உணவுகள் என்றாலே அதில் சர்க்கரை சேர்த்து தான் செய்யப்படுகிறது. அந்த சர்க்கரையை தூய்மைப்படுத்த சேர்க்கப்படும் பொருட்கள் நம் உடலில் வளர்சிதை மாற்றத்தில் பெரும் பாதிப்பை ஏற்படுத்துகிறது.
அடுத்து இப்போது நவீன வாழ்க்கை முறையில் எதற்கெடுத்தாலும் பார்ட்டி என்று மது அருந்துதல் பரவலாக உள்ளது. அசைவ உணவுகள், மது வகைகள் அந்த நேரத்தில் அவர்களுக்கு மன மகிழ்ச்சியை தருவது போல் தோன்றினாலும் உண்மையில் அவை உடலின் இயங்குநீர் (ஹார்மோன்) சீர்குலைவை ஏற்படுத்துகிறது. இதனால் கணையத்தில் ரணம், தோல் தொடர்பான வியாதிகள், தாம்பத்திய வாழ்க்கையில் பிரச்சினை, ஊட்டச்சத்துக் குறைபாடு, வயிற்றுப்புண், ஜீரணசக்தி குறைதல், புற்றுநோய் அபாயம், கல்லீரல் வீக்கம், மஞ்சள்காமாலை, இதயத் துடிப்பில் மாற்றம், ரத்தக் குழாய்கள் பாதிப்பு, இதய தசைகள் பழுதடைதல் போன்றவை நேரும். எனவே இவற்றை தவிர்ப்பது நல்லது.
இதயத்திற்கு இதமான உணவுகள் பற்றி பார்ப்போம்.
தக்காளி :
தக்காளியில் விட்டமின் ஏ, சி மற்றும் லைகோபீன் போன்றவை உள்ளது. இவை இதயத்திற்கு பலம் தருகிறது. ஆன்டி ஆக்ஸிடென்ட் நிறைய பெற்றுள்ளது. தக்காளியை தினமும் உணவில் சேர்த்துக் கொள்ளலாம். தக்காளி சாஸ், தக்காளி சாலட் ஆகியவை இதயத்தை பாதுகாப்பவை.
அவகேடோ :
அவகாடோவில் பொட்டாசியம், அதிகம் உள்ளது. விட்டமின் சி, நார்சத்து மற்றும் கரோடினாய்டு ஆகியவை கொண்டுள்ளது. கரோடினாய்டு இதய பாதிப்பினை தடுக்கிறது. அவகாடோ நாம் சாப்பிடும் மற்ற உணவுகளைன் சத்துக்களையும் உடல் உறிஞ்சிக் கொள்ள உதவி புரிகிறது.
பீன்ஸ் :
பீன்ஸ் வகை காய்களில் அதிகமாக ஆன்டி ஆக்ஸிடென்ட், ஒமேகா 3 ஃபேட்டி அமிலம், பி காம்ப்ளக்ஸ் ஆகியயவற்றை கொண்டுல்ளது. எல்லா வகையான பீன்ஸ் விதைகள் இதயத்திற்கு வலு சேர்க்கின்றன. ரத்தக் குழாய்களில் படியும் கொழுப்பு செல்களை உட்கிரகித்து, செரிமானத்திற்கு உட்படச் செய்கிறது.
வால் நட் :
வால் நட் இதயத்திற்கு மிகவும் நல்லது. ரத்த செல்களை ஆரோக்கியப்படுத்துகிறது. கை நிறைய வால் நட் சப்பிட்டாலும் குறைந்த கொழுப்பே உள்ளது. அதிக நார்சத்துக்களை உடலுக்கு தருகிறது.
யோகார்ட் :
நம் ஈறுகள் பலவீனமடைந்தால், இதய நோய்கள் வரும் என மருத்துவர்கள் கூருகின்றனர். யோகார்ட் ஈறுகளை பலப்படுத்தும். இது சக்தி வாய்ந்த ஆன்டிஆக்ஸிடென்ட், விட்டமின் மற்றும் நார்சத்துக்களை கொண்டுள்ளது. இதயத்தின் செயல்களை யோகார்ட் ஊக்குவிக்கிறது.
மேலும் சிவப்பு நிறத்தில் உள்ள காய்கறிகள், பழங்கள், தானியங்கள் இதயத்திற்கு பலம் சேர்க்கும் உணவுகளாகும்.
பிராணயாமம், யோகாசனம், தியானம், நடைப்பயிற்சி, சம்மணமிட்டு அமர்த்தல் போன்றவற்றையும் கடைப்பிடித்து இதயநோய் வராமல் காப்போம்.
மேலும் மிருத்சஞ்சீவி /அபானவாயு முத்ரா தினமும் இருந்து நிமிடங்கள் செய்துவர இதயநோய் வராமலும் ஏற்கனவே இருப்பவர்களுக்கு மேலும் அதிகமாகாமலும் தடுக்க கூடிய அற்புத முத்திரையை செய்து நலமோடு வாழ்வோம்.