தமிழ்நாடு அரசு நடத்திய பொறியியல் காலி பணியிடங்களில் தேர்வில் காரைக்குடியில் இயங்கி வரும் PYRAMID IAS ACADEMY பயிற்சி நிறுவனத்தில் பயின்ற போட்டியாளர்கள் 534 பேர் வென்று சாதனை புரிந்துள்ளனர் 701 காலிபணியிடங்களில் 534 பேர் தேர்வாகி வரலாற்று சாதனை படைத்துள்ளனர்.
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் சார்பாக தமிழ்நாடு அரசு பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைத் துறை,தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம், சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் மேலும் பொறியியல் துறை சார்ந்த ஒருங்கிணைந்த பொறியியல் பணிகளில் உள்ள உதவிப் பொறியாளர் (AE) பதவிக்கான காலிப் பணியிடங்களில் நேரடி நியமனம் செய்வதற்கான அறிக்கை கடந்த 04-04-2022 அன்று வெளிட்டது. இதில் 716 உதவிப் பொறியாளர் பணி உள்பட 831 பணியிடங்களுக்கான தேர்வு 02.07.2022 நடைபெற்றது. இதில் தேறியவர்களுக்கு நேர்முகத் தேர்வு நடைபெற்றது.
இந்த தேர்வுகளின் முடிவுகள் அன்மையில் வெளியானது. தேர்வு முடிவுகளின் படி 701 தேர்வர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைக்கப்பட்டுள்ளனர் தேர்வானவர்கள் 701 பேர்களில் 534 தேர்வர்கள் காரைக்குடி PYRAMID IAS ACADEMY -யில் பயின்றவர்கள். இத்தகைய இமாலய சாதனையை PYRAMID IAS ACADEMY படைத்துள்ளது.
சிவகங்கை மாவட்டம் காரைக்குடியை மையமாகக் கொண்டு செயல்படும் PYRAMID IAS ACADEMY-2007-ல் தனது போட்டித் தேர்வுகளுக்கான கல்விப் பணியைத் தொடங்கியது. 2007-முதல் தற்போது வரை தகுதி வாய்ந்த பொறியாளர்களை பல்வேறு அரசு பணிகளுக்கு அனுப்பியுள்ளது. இதுவரை பல்வேறு அரசு துறைகளில் நடந்த தேர்வுகளில் PYRAMID IAS ACADEMY மாணவர்கள் 2893 பேர் மத்திய,மாநில அரசு பணியிங்களை வென்றுள்ளனர்.
கடந்த 2007-ஆம் ஆண்டு முதல் பொறியியல் துறை சார்ந்த பல்வேறு மத்திய,மாநில அரசுப் பணிகளில் எங்கள் PYRAMID IAS ACADEMY -யில் படித்த மாணவர்கள் பல உயர் பதவிகளை அலங்கரிக்கின்றனர். எங்கள் பயிற்சி அகடாமியில் பயின்ற மாணவர்களில் 60-70 சதவிகிதம் வரை பணி நியமனம் பெற்றுள்ளனர். தற்போது இந்த தேர்வு முடிவுகளும் அதையே மெய்ப்பித்து வரலாற்று சாதனை படைத்துள்ளது.
PYRAMID IAS ACADEMY-யின் செயல்பாடுகள் போட்டியாளர்களை முதலில் ஊக்குவித்து அவர்களின் திறமைகளை வெளிக்கொணர்ந்து போட்டித் தேர்வுகளில் மாபெரும் வெற்றி பெறவைத்து இன்று தமிழகத்தில் முதலிடத்தை பிடித்து பலரின் பார்வையை தன்னகத்தே கொண்டுள்ளது.
இத்தகைய சிறப்புகளைப் பெற்று தமிழகம் முழுவதும் உள்ள பல மாணவர்களின் அரசுப் பணிக் கனவை நிறைவேற்றி வரும் PYRAMID IAS ACADEMY -யின் இயக்குனர் மற்றும் ஆசிரியர்கள் அனைவருக்கும் மனமார்ந்த பாராட்டுகள்
செய்தி & படங்கள்
சிங்தேவ்.