முக்கிய செய்திகள்

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் தி.மு.க.வுக்கு யார் ஆதரவு கொடுத்தாலும் வரவேற்போம்: துரைமுருகன்..


ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் தி.மு.க.வுக்கு யார் ஆதரவு கொடுத்தாலும் அதனை வரவேற்போம் என்று துரைமுருகன் கூறினார்.

தி.மு.க. முதன்மை செயலாளரும், எதிர்கட்சி துணைத்தலைவருமான துரைமுருகன் இன்று கோவையில் நிருபர்களின் கேள்விக்கு அளித்த பதில்..

கேள்வி:- ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் நடிகர் விஷால் போட்டியிடுவது பற்றி தங்கள் கருத்து?

பதில்:- தி.மு.க. வெற்றி பிரகாசமாக உள்ளது.

கேள்வி:- கன்னியாகுமரியில் பலத்த சேதம் அடைந்துள்ளது. அரசு நடவடிக்கை போதுமானதா?

பதில்:- கன்னியாகுமாரி கடலில் மூழ்கினால் என்ன? மிதந்தால் என்ன? அரசுக்கு எந்த அக்கறையும் இல்லை.

கேள்வி:- ஒக்கி புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய நிவாரணம் வழங்க அரசு எடுத்த நடவடிக்கை போதுமானதா?

பதில்:- நாட்டில் அரசாங்கம் ஒன்று நடப்பதாக தெரியவில்லை. அப்படி இருந்தால் ஏன் முன்னெச்சரிக்கை எடுக்கவில்லை.

கேள்வி:- ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் திமுகவிற்கு இடைத்தேர்தலில் மதிமுக ஆதரவு பற்றி தங்களின் கருத்து என்ன?

பதில்:- ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் தி.மு.க.வுக்கு யார் ஆதரவு கொடுத்தாலும் அதனை வரவேற்போம் என்றார்