முக்கிய செய்திகள்

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் : விஷாலுக்கு பிற்பகல் 3 மணி வரை கெடு..

ஆர்.கே நகர் இடைத்தேர்தலில் சுயேட்சையாக போட்டியிட வேட்பு முனு தாக்கல் செய்த நடிகர் விஷாலின் வேட்பு மனு நிராகரிக்கப்பட்டது.இந் நிலையில் விஷால் தமிழக தேர்தல் ஆணையரிடம் முறையிட்டதையடுத்து இன்று விசாலுக்கு சில நிபந்தனைகளை விதித்துள்ளார் தேர்தல் அதிகாரி. அதன்படி

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் என் வேட்புமனுவில் கையெழுத்துப் போட்டுவிட்டு, பின்னர் எங்கள் கையெழுத்தில்லை என்று பின்வாங்கிய அந்த இருவரையும் இன்று 3 மணிக்குள் ஆஜர்படுத்த தேர்தல் நடத்தும் அலுவலர் வலியுறுத்தியுள்ளார். இரண்டு மணிநேரத்துக்கும் குறைவான நேரமே உள்ளது’ என்று விஷால் ட்வீட் செய்துள்ளார்.