இடைத்தேர்தல் நடக்க உள்ள ஆர்.கே.நகர் தொகுதியின் தேர்தல் நடத்தும் அலுவலரை மாற்ற வேண்டும் என தி.மு.க செயல் தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளார்.
ஆர்.கே.நகர் தொகுதியில் ஆளும் கட்சியின் அத்துமீறல்கள் குறித்து தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினார்.
ஆளும் கட்சி சொல்வதை தான் தேர்தல் நடத்தும் அலுவலர் செய்வார் என்பது தற்போது தெரியவந்துள்ளது என அவர் குற்றம் சாட்டினார்.