முக்கிய செய்திகள்

ஆர்.கே.நகர் வாகன சோதனையில் இதுவரை ரூ.5.21 லட்சம் பறிமுதல்..


ஆர்.கே நகரில் இதுவரை 5 லட்சத்து 21 ஆயிரம் ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. ஆர்.கே நகருக்கு வரும் 21ந்தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.

தேர்தல் அறிவிப்பு வெளியானதில் இருந்து பறக்கும் படையினர் அப்பகுதிகளில் வாகன சோதனையை தீவிரப்படுத்தியுள்ளனர்.

உரிய ஆவணங்களின்றி எடுத்து சென்றதாக இதுவரை 5,21,600 ரூபாய் பணம் கைப்பற்றப்பட்டுள்ளன. தேர்தல் தொடர்பாக 148 புகார்கள் வந்ததாகவும், அதில் 142 புகார்களுக்கு தீர்வு காணப்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது.

தேர்தல் விதிமீறல் மற்றும் பணப்பட்டுவாடா தொடர்பாக 15 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.