முக்கிய செய்திகள்

ஆர்.கே.நகர் தொகுதியில் 5,117 போலி வாக்காளர்களை நீக்கவில்லை : உயர் நீதிமன்றத்தில் மருதுகணேஷ் முறையீடு..


சென்னை ஆர்.கே.நகரில் உள்ள போலி வாக்காளர்களை நீக்க உத்தரவிடக்கோரி ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. 5,117 போலி வாக்காளர்களை நீக்கவில்லை என்று திமுக வேட்பாளர் மருதுகணேஷ் வழக்கு தொடர்ந்துள்ளார்.

போலி வாக்காளர் பற்றி தேர்தல் ஆணையம் தவறான தகவலை தருவதாக அவர் குற்றம் சாட்டினார். மருதுகணேஷ் தாக்கல் செய்த மனுவை உயர்நீதிமன்றம் நாளை விசாரிக்கிறது.