ஆர்.கே.நகரில் பணபட்டுவாடா :அதிமுகவினர் மும்மரம்..


சென்னை ஆர்.கே.நகர் இடைத்தேர்தல், வரும் டிசம்பர் 21-ம் தேதி நடைபெற இருக்கிறது. அதற்காக அரசியல் கட்சியினர் தீவிர தேர்தல் பிரசாரத்தில் இறங்கியுள்ளனர். ஒருபக்கம் திமுக, அதிமுக, பாஜக, நாம் தமிழர் உள்ளிட்ட கட்சியை சேர்ந்தவர்களும், மறுபக்கம் டிடிவி தினகரன் உள்ளிட்ட சுயோட்சை வேட்பாளர்களும் தங்கள் மக்கள் செல்வாக்கை நிரூபிக்க கூட்டத்தை சேர்த்துக்கொண்டு தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர்.

ஆர்.கே.நகர் பகுதியில் தற்போது தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளது. இதனால் தேர்தல் அதிகாரிகளால் தீவிர வாகன சோதனைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு பணபட்டுவாடா நடைபெறுகிறதா என்பதையும் காவல்துறையினர் கண்காணித்து வருகின்றனர்.

இந்நிலையில், பார்ப்பவர்களுக்கு வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு பணி நடைபெறுவது போல் தெரியும். ஆனால் தேர்தல் அதிகாரிகள், காவல்துறையினர் முன்பாகவே அதிமுகவினர் பட்டப்பகலில் வாக்காளர் பட்டியலுடன் வீடுவீடாக சென்று ஒரு வீட்டுக்கு எத்தனை ஒட்டு என்பதை துள்ளியமாக ஒரு நோட்டில் குறித்து கொண்டு செல்கின்றனர். பணம் எப்போது கொடுக்கப்படும், எங்கு வந்த வாங்க வேண்டும் என்பது போன்ற விஷயங்கள் ரகசியமாக காக்கப்படுகிறது.


 

பிற்படுத்தப்பட்டோருக்கு இடஒதுக்கீட்டை 50 சதவீதமாக உயர்த்த வேண்டும்: மு.க.ஸ்டாலின்..

திருவண்ணாமலையில் ஹரீஷ் கல்யாணுடன் பிந்து மாதவி சாமி தரிசனம்..

Recent Posts