முக்கிய செய்திகள்

ஆர்.கே.நகரில் ரூ.20 டோக்கன் விநியோகித்த 4 பேர் கைது..


சென்னை ஆர்.கே.நகரில் ரூ.20 டோக்கன் விநியோகித்த புகாரில் 4 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும் அவர்களிடமிருந்த டோக்கன்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

டோக்கன் விநியோகித்த ஜான் பீட்டர், செல்வம், ரவி, சரண்ராஜ் ஆகியோரை வாக்காளர்களை தாக்கியதாக போலீசார் கைது செய்தனர்.

வாக்காளருக்கு பணப்பட்டுவாடா செய்வது தொடர்பான ஆவணங்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

கொடுத்த டோக்கனுக்கு நேற்று பணம் கேட்டபோது வாக்காளர்களை டி.டி.வி ஆதரவாளர்கள் தாக்கியதாக புகார் அளித்துள்ளனர்.