தமிழகத்தின் புதிய ஆளுநராக ஆர்.என்.ரவி பதவியேற்பு..

R N Ravi today assumed charge as the 26th Governor of Tamilnadu at Raj Bhavan today. Chief Justice of the Madras High Court Justice Sanjib Banerjee administered oath of office to Ravi.

தமிழகத்தின் 26-வது புதிய ஆளுநராக ஆர்.என்.ரவி பதவியேற்றுக் கொண்டார்
கரோனா காலகட்டம் என்பதால், கிண்டியிலுள்ள ஆளுநர் மாளிகையில் திறந்த வெளியில் பந்தல் அமைத்து காலை 10:30 மணிக்கு பதவியேற்பு விழா நடைபெற்றது. புதிய ஆளுநரான ஆர்.என்.ரவிக்கு உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். இதில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, அமைச்சர்கள், சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள், உயர்நீதிமன்ற நீதிபதிகள் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ் அதிகாரிகள் உட்பட 500 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. பதவியேற்பு விழா முடிந்ததும், தேநீர் விருந்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

பதவியேற்புக்கு பிறகு செய்தியாளர்ளைச் சந்தித்த ஆளுநர் தமிழ்நாட்டின் புதிய ஆளுநராக பதவியேற்றது மிக்க மகிழ்சியளிக்கிறது.

ராகுலுடன் ஜே.என்.யூ மாணவர் சங்க முன்னாள் தலைவர் கன்னையா குமார் டெல்லியில் சந்திப்பு..

குன்றக்குடி காவல் சார்பு ஆய்வாளர் சுந்திரராசுக்கு சிறந்த சேவைக்கான அண்ணா விருது …

Recent Posts