ரஃபேல் கொள்முதல் ஒப்பந்தத்தில் ஊழல் அம்பலம் : புதிய ஆதாரங்களை வெளியிட்டது பிரபல ஆங்கில நாளேடு

ரஃபேல் போர் விமானம் கொள்முதல் ஒப்பந்தத்தில் 2 பிரான்ஸ் நிறுவனங்களுக்கு மோடி அரசு விதிமுறைகளை மீறி சலுகைகளை அளித்துள்ளது அம்பலமாகியுள்ளது.

ரஃபேல் போர் விமானம் ஊழல் தொடர்பாக பல்வேறு ஆதாரங்களை விளியிட்டு வரும் பிரபல ஆங்கில நாளேடு இதற்கான ஆதாரங்களை வெளியிட்டுள்ளது.

டஸ்ஸால்ட் மற்றும் எம்.பி.டி.ஏ. என்ற பிரான்ஸ் நிறுவனங்களுக்கு ஆப்செட் எனப்படும் உள்ளூர் ஒப்பந்ததாரர் நியமனத்திற்கான எப்போதும் இல்லாத அளவிற்கு சலுகை அளிக்கப்பட்டது என்பது அந்த நாளேடின் புகாராகும்.

சுமார் ரூ. 60,000 கோடிக்கு ரஃபேல் கொள்முதல் ஒப்பந்தத்திற்காக பாதுகாப்புத்துறைக்கான தளவாட கொள்முதல் விதிமுறையில் 2 முக்கிய ஷரத்துகள் நீக்கப்பட்டுள்ளன எனவும் அந்த நாளேடு கூறியுள்ளது.

அதன்படி வரம்பு மீறி செல்வாக்கை பயன்படுத்தும் நிறுவனங்கள் மற்றும் இடைத்தரகர்களுக்கு விதிக்கப்படும் அபராதம் முறை நீக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாதுகாப்புத்துறை கையகப்படுத்தல், கவுன்சில் ஒரு முழுமையடையாத கோரிக்கையை பாதுகாப்புத்துறை அமைச்சரவைக்கு ஒப்புதலாக அனுப்பிவைக்கப்பட்டது என்று புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய கொள்முதல் பேரக்குழுவின் முயற்சியை, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் நீர்த்துப்போக செய்தார் என்றும் அந்த நாளேடு குற்றம் சாட்டியுள்ளது.