நவக்கிரங்களில் ஒன்றறை வருடங்களுக்கு ஒருமுறை ராகு,கேது பெயர்ச்சி நடைபெறும். இன்று ராகு,கேது பெயர்ச்சி நடைபெறுவதால்
திருப்பாம்புரம்,திருநாகேஸ்வரம்,கீழ்பெரும்பள்ளம் கோவில்களில் பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர். சிறப்பு பூஜைகளும் நடைபெற்று வருகிறது.
திருவாரூர் மாவட்டம் திருப்பாம்புரம் பாம்புரநாதர் ஆலயத்தில் இன்று ராகு,கேது பெயர்ச்சியை ஒட்டி சிறப்பு யாகங்கள் தொடங்கின.
ராகு,கேது பகவானுக்கு அபிஷேகங்களும்,தீபாராதனையும் நடைப்பெற்றபோது ஏராளமானோர் கலந்து கொண்டு வழிபட்டனர்.
இன்று பிற்பகல் 2 மணி அளவில் ராகுபகவான் கடகராசியில் இருந்து மிதுன ராசிக்கும், கேதுபகவான் மகர ராசியில் இருந்து தனுசு ராசிக்கும் இடபெயர்ச்சி ஆகும் போது மகா தீபாராதனை நடைபெறும்.
இதை ஒட்டி பக்தர்களின் வசதிக்காக ஆலய நிர்வாகம் சார்பில் விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இது போல் கும்பகோணம் அருகில் உள்ள திருநாகேஸ்வரம், நாகை மாவட்டம் பம்பூகார் அருகில் உள்ள கீழ்பெரும்பள்ளத்திலும் சிறப்பு யாகங்கள் இன்று மாலை நடைபெறவுள்ளது.
தமிழகத்தின் சிவலாயங்களில் ராகு,கேது பெயர்ச்சியை முன்னிட்டு பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர்.