ரஃபேல் ஒப்பந்தம் மற்றும் தொழிலதிபர்களுக்கு கடன் தள்ளுபடி குறித்து தொடர்ந்து பொய் பேசும் ராகுல்காந்தி ஒரு கோமாளி இளவரசர் என்று மத்திய நிதியமைச்சர் அருண்ஜெட்லி விமர்சித்துள்ளார்.
மத்திய பாஜக அரசு மீது தொடர்ந்து குற்றச்சாட்டுகளை கூறும் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்திக்கு கண்டனம் தெரிவித்துள்ள மத்திய நிதியமைச்சர் அருண்ஜெட்லி,
ரஃபேல் ஒப்பந்தம் தொடர்பாக ராகுல் காந்தி கூறியது அனைத்தும் முதல் பொய் என்று கூறியுள்ளார்.
15 தொழில் அதிபர்களுக்கு மத்திய அரசு இரண்டரை லட்சம் கோடி கடன் தள்ளுபடி செய்ததாக கூறுவது 2 வது பொய் என்று சாடியுள்ள அருண் ஜெட்லி,
பொய்களை கூறி சூழலை மாசுபடுத்தும் ஒரு கோமாளி இளவரசரை, பொது சொற்பொழிவுகள் ஆற்ற அனுமதிக்கலாமா? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
ராகுலை பொதுமேடைகளில் பேச அனுமதிப்பது குறித்து உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியா தீவிரமாக பரிசீலிக்க வேண்டும் எனவும் ஜெட்லி கடுமையாக விமர்சித்துள்ளார்.