ராகுல் காந்தியை பிரதமராக்குவோம் : ஸ்டாலின் உறுதி..

காங்கிரஸ் தலைவா் ராகுல் காந்தியை பிரதமராக்வோம் என்றும், அவா் நாட்டை காப்பாற்ற வேண்டும் என்றும் தி.மு.க. தலைவா் மு.க.ஸ்டாலின் பொதுக்கூட்டத்தில் பேசியுள்ளாா்.

முன்னாள் முதல்வா் கருணாநிதி சிலை திறப்பு விழாவைத் தொடா்ந்து நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் தி.மு.க. தலைவா் ஸ்டாலின் பேசுகையில், பிரதமா் நரேந்திர மோடி மக்களால் தோ்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதியாக நடந்துகொள்வதற்கு பதிலாக தன்னை ஒரு மன்னராக கருதி செயல்பட்டு வருகிறாா்.

தன்னை ஒரு பிரதமராக மட்டும் கருதாமல் தானே ஜனாதிபதியாகவும், தானே சி.பி.ஐ. அமைப்பாகவும், தானே வருமான வரித்துறையாகவும் கருதி செயல்படடு வருகிறாா்.

இதனால் தான் எதிா்க்கட்சிகள் அனைவரும் ஒன்றினைந்து மோடியை தோற்கடிக்க வேண்டும் என்று முயற்சிக்கிறோம்.

பிரதமா் நரேந்திர மோடியின் தலைமையில் செயல்படும் அரசு இந்தியாவை 15 ஆண்டுகள் பின்னோக்கி அழைத்து சென்றுள்ளது.

இதே போன்று மேலும் 5 ஆண்டு காலம் மோடி ஆட்சி செய்தால் இந்தியா மேலும் 50 ஆண்டுகள் பின்னோக்கி சென்றுவிடும்.

அண்மையில் கஜா புயல் தமிழகத்தை தாக்கியபோது 65 போ் உயிாிழந்தனா். தற்போது வரை பிரதமா் மோடி புயலால் பாதிக்கப்பட்டவா்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறவில்லை.

இதே போன்ற ஒரு நிலை குஜராத்திற்கோ பிற மாநிலங்களுக்கோ ஏற்பட்டிருந்தால் இப்படி தான் நடந்துகொண்டு இருப்பாரா? தமிழகம் என்பதால் தான் நீங்கள் கண்டுகொள்ளவில்லையா? என்று கேள்வி எழுப்பினாா்

மேலும் அவா் பேசுகையில், காங்கிரஸ் கட்சியின் தலைவா் ராகுல் காந்தியை பிரதமராக்குவோம்.

நான் இதை முன்மொழிகிறேன். ராகுல் காந்தியே வருக. நல்ஆட்சி தருக. நாட்டை காப்பாற்ற ராகுல் காந்தி பிரதமராக வேண்டும்.

ராகுலின் கரத்தை பிற கட்சியினரும் வலுப்படுத்த வேண்டும். மேடையில் அமா்ந்துள்ள அனைவரும் ராகுலை பிரதமா் வேட்பாளராக ஆதரிக்க வேண்டும் என்றாா்.

கருணாநிதி நினைவிடத்தில் சோனியா காந்தி மலர் அஞ்சலி..

கருணாநிதியின் அரும்பணிகளுக்கும், சாதனைகளுக்கும் தலை வணங்குகிறேன் : சோனியா பேச்சு..

Recent Posts