சம்பல் பகுதிக்கு செல்ல முயன்ற ராகுல் காந்தி தடுத்து நிறுத்தம்…

உத்தரப் பிரதேச மாநிலத்தில் சமீபத்தில் வன்முறை நடந்த சம்பல் பகுதிக்கு செல்ல முயன்ற மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி மாநில காவல்துறையினரால் தடுத்து நிறுத்தம் செய்யப்பட்டனர்.

உத்தரபிரதேச மாநிலம் சம்பல் பகுதியில் இருந்த ஹரிஹர் இந்து கோயிலை இடித்து விட்டு ஜமா மசூதி கட்டப்பட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து நீதிமன்ற உத்தரவுப்படி தொல்லியல் துறையினர் கள ஆய்வுக்கு சென்றபோது வன்முறை வெடித்தது. இதில் 5 பேர் பலியாகினர்.

இந்த விவகாரம் நாடாளுமன்ற இரு அவைகளிலும் எதிரொலித்தது. தொடர்ந்து அந்த பகுதியில் கலவரம் நீடிப்பதால் சம்பல் பகுதியில் உரிய அதிகாரிகள் அனுமதியின்றி வௌியாட்களோ, பிற சமூக அமைப்புகளோ அல்லது பொதுமக்கள் பிரதிநிதிகளோ மாவட்ட எல்லைக்குள் நுழையக் கூடாது. அங்கு அமைதி, சட்டம், ஒழுங்கை நிலைநாட்டும் விதமாக வௌியாட்கள் நுழைய இம்மாதம் 31ம் தேதி வரை தடை விதிக்கப்பட்டுள்ளது என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. சம்பலில் பிஎன்எஸ்எஸ் 163 பிரிவின்கீழ் ஏற்கனவே தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் வன்முறையால் பாதிக்கப்பட்ட உத்தப்பிரதேசத்தின் சம்பல் மாவட்டத்திற்கு சென்ற ராகுல் காந்தியை அம்மாநில போலீஸார் தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. வன்முறையில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறச் சென்ற ராகுல் காந்தியை எல்லையிலேயே தடுத்து நிறுத்தியது உ.பி. காவல்துறை. டெல்லி – மீரட் நெடுஞ்சாலையில் உள்ள காஸிப்பூர் எல்லையிலேயே ராகுல் காந்தி மற்றும் வயநாடு தொகுதி எம்.பி.பிரியங்கா காந்தி உள்ளிட்டோர் வந்த கார்கள் தடுத்து நிறுத்தப்பட்டன. முன்னதாக சம்பல் மாவட்டத்திற்கு வரும் ராகுல் காந்தியை தடுத்த நிறுத்த, அப்பகுதி முழுவதும் போலீசாரை குவித்தது அம்மாநில அரசு.

திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழா : கொடியேற்றத்துடன் தொடங்கியது…

காரைக்குடியில் தவேக கட்சியில் NAM சித்திக்,முரளி தலைமையில் 150 பேர் இணைந்தனர்…

Recent Posts