முக்கிய செய்திகள்

திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலை சீராக உள்ளது : ராகுல்


திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலை சீராக இருப்பதாக காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்.

சென்னை காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள கருணாநிதியின் உடல்நிலை குறித்து அறிவதற்காக காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி டெல்லியில் இருந்து விமானம் மூலம் சென்னை வந்தார். காவேரி மருத்துவமனைக்கு சென்று அவர் கருணாநிதியின் உடல்நலம் குறித்து கேட்டறிந்தார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ராகுல், சிகிச்சை பெற்று வரும் கருணாநிதியை நேரில் பார்த்ததாக கூறினார். அவரது உடல்நிலை சீராக இருக்கிறது என்றும் தெரிவித்தார்.

திமுக தலைவர் கருணாநிதி நலம் பெற வேண்டும் என்று சோனியாகாந்தி வாழ்த்து தெரிவித்தாகவும் ராகுல்காந்தி தெரிவித்தார்.