அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் தடையை மீறி விவசாயிகளை சந்திக்க லக்கிம்பூருக்கு புறப்பட்டார். ராகுல் காந்தி
உத்தரப் பிரதேச மாநிலத்தில் வன்முறையால் பாதிக்கப்பட்ட லக்கிம்பூருக்கு காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தலைமையிலான 5 பேர் கொண்ட குழு இன்று செல்லவிருந்த நிலையில், அவரது பயணத்திற்கு அம்மாநில அரசு அனுமதி மறுத்துள்ளது.
இதைத்தொடர்ந்து டெல்லியில் வைத்து காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “ஜீப்பால் மோதி விவசாயிகள் மீது திட்டமிட்ட தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. ஆனால் விவசாயிகள் கொல்லப்பட்ட வன்முறையின் பின்னணியில் உள்ளவர்கள் கைது செய்யப்படவில்லை. குறிப்பாக அதன் பின்னணியில் உள்ள மத்திய அமைச்சர் அஜய் மிஸ்ரா மற்றும் அவரது மகன் கைது செய்யப்பட்டவில்லை. இச்சம்பவம் நடந்த லக்கிம்பூர் செல்ல எனக்கு உ.பி. அரசு விதித்த தடை உத்தரவு பொருந்தாது. அரசியல் தலைவர்களை உத்தரப்பிரதேசத்தில் அனுமதிக்க மறுப்பது ஏன்? எப்படியும் நாங்கள் லக்கிம்பூர் சென்று உயிரிழந்த விவசாயிகளின் குடும்பத்திற்கு ஆறுதல் தெரிவிக்க உள்ளோம்.