முக்கிய செய்திகள்

நமஸ்தே ட்ரம்ப், ராஜஸ்தான் ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சி- கரோனா காலத்தில் மோடி அரசின் சாதனைகள்: ராகுல் கிண்டல்…

கோவிட்-19 என்ற கரோனா வைரஸ் காலக்கட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி அரசின் சாதனைகள் என்று நமஸ்தே ட்ரம்ப் நிகழ்ச்சியையும் ராஜஸ்தான் ஆட்சிக்கவிழ்ப்பு முயற்சியையும் குறிப்பிட்டு காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி கிண்டலடித்துள்ளார்.

ஹிந்தி மொழியில் கேலித்தொனியில் இந்த ட்வீட்களை ராகுல் காந்தி வெளியிட்டுள்ளார். மேலும் இந்தச் சாதனைகளினால் கரோனா பெருந்தொற்றில் இந்தியா ‘தற்சார்பு’ எய்தியுள்ளது என்று கடும் கிண்டலை வீசியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்வீட்:

கோவிட் காலக்கட்டத்தில் அரசின் சாதனைகள்: பிப்ரவரி- நமஸ்தே ட்ரம்ப், மார்ச்-ம.பி. அரசைக் கவிழ்த்தது, ஏப்ரல்– மக்களை மெழுகு வர்த்தி ஏற்றச்செய்தல், மே-அரசின் 6வது ஆண்டு கொண்டாட்டம், ஜூன் – பிஹார் மெய்நிகர் பேரணி, ஜூலை–ராஜஸ்தான் அரசைக் கவிழ்க்கும் முயற்சி.

இந்தச் சாதனைகளினால் கரோனா வைரஸ்சுக்கு எதிரான போராட்டத்தில் தற்சார்பு எய்தியது.

இவ்வாறு விமர்சித்துள்ளார் ராகுல் காந்தி.