முக்கிய செய்திகள்

நாடாளுமன்றத்தைக் கூட்டுங்கள் மோடி… நாட்டுக்கு உண்மை தெரியட்டும்: ராகுல்

நாடாளுமன்றத்தின் குளிர்காலக் கூட்டத்தொடரைக் கூட்டுமாறு காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி மோடிக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ரபேல் போர்விமான ஒப்பந்த முறைகேடு உள்ளிட்ட மத்திய அரசின் பல்வேறு முறைகேடுகளை அப்போதுதான் நாட்டுக்குத் தெரியும் வகையில் விவாதிக்க முடியும் என்றும் ராகுல்காந்தி தமது ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளார். இதனிடையே, நாடாளுமன்றக் குளிர்காலக் கூட்டத் தொடரைக் கூட்டுவது குறித்து ஆலோசிக்க இன்று அமைச்சரவைக் கூட்டம் நடைபெற உள்ளது.

முத்தலாக் முறையை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான சட்டவரைவைத் தாக்கல் செய்வது உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்தும் இதில் ஆலோசிக்கப்பட உள்ளது.

இந்நிலையில், ஐமுகூ ஆட்சிக் காலத்தில் பல ஆண்டுகள் குளிர்காலக் கூட்டத் தொடர் தள்ளிப்போடப்பட்டதை வேண்டும் என்றே மறந்து விட்டு காங்கிரஸ் கட்சியினர் குற்றம்சாட்டி வருவதாக நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் ஆனந்த்குமார் தெரிவித்துள்ளார்.

Rahul Urge Modi To conduct winter session