முக்கிய செய்திகள்

ரயில் படியில் பயணம் செய்யும் பள்ளி, கல்லூரி மாணவர்களின் பாஸ் ரத்து..


ரயில் படியில் பயணம் செய்யும் பள்ளி, கல்லூரி மாணவர்களின் பாஸ் ரத்து செய்யப்படும் என்று ரயில்வே பாதுகாப்பு படை எச்சரித்துள்ளது. புறநகர் ரயில்களின் படிகளில் பயணம் செய்பவர்கள் விபத்துகளில் சிக்கி உயிரிழப்பது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக பள்ளி, கல்லூரி மாணவர்கள் ரயில் படிகளில் அதிக எண்ணிக்கையில் பயணம் செய்வதால் அதனை தடுக்க ரயில்வே பாதுகாப்பு படை பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.

அதன் ஒருகட்டமாக படிகளில் பயணம் செய்யும் மாணவர்களின் ரயில் பாஸ் ரத்து செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ரயில் படியில் பயணம் செய்யும் மாணவர்களை வீடியோ எடுத்து அதனை அவர்களின் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு அனுப்பவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. ரயில் பாதைகளில் நடைபெறும் குற்றங்களை தடுக்க ரயில்வே ரோந்து இஞ்சின் திட்டம் அறிமுகப்படுத்தப்பட உள்ளதாகவும் ரயில்வே பாதுகாப்பு படை தெரிவித்துள்ளது.