முக்கிய செய்திகள்

ரயில்வேயில் 2.2 லட்சம் காலிப் பணியிடங்கள்; விரைவில் தேர்வு..


ரயில்வேயில் லட்சக்கணக்கில் காலிப் பணியிடங்கள் இருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை நிறுவனமாக ரயில்வே திகழ்கிறது. இதில் ஆட்களை நிரப்ப தேர்வாணையம் மூலம் தேர்வுகள் நடத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில் மக்களவையில் பேசிய ரயில்வே அமைச்சர் பியூஸ் கோயல், ஒட்டுமொத்தமாக 2 லட்சத்து 20 ஆயிரத்துக்கும் அதிகமான காலிப் பணியிடங்கள் இருப்பதாக தெரிவித்தார்.

அதில் வடக்கு ரயில்வே மண்டலத்தில் 27 ஆயிரத்து 537 காலிப் பணியிடங்களும், தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் ஒதுக்கீட்டில் 40 ஆயிரத்துக்கு மேற்பட்ட காலிப் பணியிடங்களும் உள்ளன.