2018ம் ஆண்டில் ரயில்வே பணியாளர் தேர்வு வாரியத்தின் மூலம் நாடு முழுவதும் 50 ஆயிரம் உதவி ஸ்டேஷன் மாஸ்டர்கள் தேர்வு செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தேர்வு குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இம்மாத இறுதியில் வெளியிடப்பட்டு விண்ணப்பங்கள் ஏற்கப்பட உள்ளன.
இதன் பின்னர் indianrailways.gov.in என்ற இணைய தளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். அங்கீகரிக்கப்பட்ட பல்கலை கழகத்தின் வாயிலாக பட்டம் பெற்றவர்கள் இப்பதவிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள் ஆவர். 18 முதல் 31 வயது வரை தகுதியாக நிர்ணயிக்கப்படும்.
இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு உச்சவயது வரம்பில் தளர்வு வழங்கப்படும். யூபிஎஸ்சி தேர்வுகளைப் போன்றே முதல்நிலைத் தேர்வு, முதன்மைத் தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வின் மூலம் தகுதியான நபர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். தேர்ந்தெடுக்கப்பட்ட தகுதியானவர்களுக்கு 5 ஆயிரத்து 200 ரூபாய் முதல் 20 ஆயிரத்து 200 வரை அடிப்படை சம்பளமாக நிர்ணயிக்கப்படும்.