ரயில்வே டிக்கெட்டுகள் மற்றும் டீ கப்களில் பிரதமர் மோடி படம்:தேர்தல் ஆணையம் மீண்டும் சம்மன்..

ரயில்வே டிக்கெட்டுகள் மற்றும் டீ கப்களில் பிரதமர் மோடி படம் அச்சடிக்கப்பட்டது குறித்து விளக்கம் அளிக்க ரயில்வே துறைக்கு தேர்தல் ஆணையம் மீண்டும் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.

நாடாளுமன்ற தேர்தலையொட்டி நாடு முழுவதும் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளது.

இந்நிலையில் ரயில்வே டிக்கெட்டுகள் மற்றும் டீ கப்களில் நானும் காவலாளி என்ற வாசகம், பிரதமர் மோடி படம் இடம் பெற்றது குறித்து தேர்தல் ஆணையத்திற்கு புகார்கள் பறந்தன.

இதனையடுத்து ரயில்வே டிக்கெட்டுகள் மற்றும் டீ கப்களில் பிரதமர் மோடி படம் இடம் பெற்றது குறித்து விளக்கம் கேட்டு ரயில்வே துறைக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.

பிரதமர் மோடி படம் அச்சடிக்கப்பட்ட ரயில் டிக்கெட்டுகள் தரப்படுவது பற்றி பதிலளிக்கவும் மீண்டும் நோட்டீஸ் அனுப்பி உள்ளது மற்றும் சிவில் விமான போக்குவரத்து அமைச்சகத்துக்கும் தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.

பிரதமர் மோடி படம் அச்சடிக்கப்பட்ட ரயில் டிக்கெட்டுகள் தரப்படுவது பற்றி கடந்த சில தினங்களுக்கு முன் புகார் எழுந்தது.

இது குறித்து விளக்கமளித்த ரயில்வே நிர்வாகம் கவனக்குறைவாக இந்த தவறு நிகழ்ந்து விட்டதாகவும்,

இந்த டீ கப்கள் வாபஸ் பெறப்படும் எனவும் விதிமீறலில் ஈடுபட்ட ஒப்பந்ததாரரிடம் அபராதம் வசூலிக்கப்படும் எனவும் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.