
கடந்த சில நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.
இந்நிலையில் மழை வெள்ள நிலவரம் தொடர்பாக திருச்சி, கரூர் உள்பட 14 மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தி வருகிறார். காவிரியில் அதிக அளவு தண்ணீர் வெளியேற்றப்படுவதை அடுத்து ஆட்சியர்களுடன் ஆலோசனை நடத்துகிறார். தலைமைச் செயலகத்தில் நடைபெறும் ஆலோசனையில் அமைச்சர்கள் துரைமுருகன், கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமசந்திரன் பங்கேற்றனர்.