முக்கிய செய்திகள்

ராஜாமுத்தையா மருத்துவ மாணவர்கள் கல்விக் கட்டணம் செலுத்த உயர்நீதிமன்றம் உத்தரவு..


சிதம்பரம் ராஜாமுத்தையா மருத்துவக் கல்லூரி மாணவர்கள் ரூ.4.50 லட்சம் கல்விக் கட்டணம் செலுத்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து மாணவர்கள் தொடுத்த மேல்முறையீட்டு வழக்கில் உச்சநீதிமன்றம் ஆணை பிறப்பித்துள்ளது.

ராஜாமுத்தையா மருத்துவக் கல்லூரியை அரசே ஏற்றுக் கொண்டதால் அரசு கட்டணத்தை வசூலிக்கக் கோரி மனு அளிக்கப்பட்டது. 2013-2014ல் சேர்ந்த மாணவர்கள் 600 பேர் அரசு நிர்ணயித்த கல்வி கட்டணத்தை வசூலிக்க வேண்டும் என்று மனு அளிக்கப்பட்டது.

ரூ.5.50 லட்சம் கல்விக் கட்டணத்தை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் மாணவர்கள் வழக்கு தொடுத்தனர். உயர்நீதிமன்றம் வழக்கை தள்ளுபடி செய்ததால் மருத்துவக் கல்லூரி மாணவர்கள் மேல்முறையீடு செய்தனர்.