இலங்கை அரசியலில் திடீர் திருப்பமாக பதவியேற்ற பிரதமர் ராஜபக்சேவை எதிர்க்கட்சி தலைவர் இரா.சம்பந்தன் அவரது இல்லத்தில் சந்தித்து பேசினார்.
பேச்சுவார்த்தையில் எதிர்க்கட்சி தலைவர் சம்பந்தனிடம் பிரதமர் மகிந்த ராஜபக்சே கோரிக்கை கேட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதில் பெரும்பான்மையை நிரூபிக்க 16 எம்.எல்.ஏக்களின் ஆதரவு தேவை என ராபக்சே கேட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதையடுத்து ராபக்சேவுக்கு ஆதரவு அளிக்க இரா.சம்பந்தன் நிபந்தனை விதித்துள்ளார். தமிழ் தேசியக்கூட்டமைப்பின் அனைத்து கோரிக்கைகளையும் விரைவில் நிறைவேற்ற வேண்டும் என்ற நிபந்தனையை விதித்துள்ளார்.