மாநிலங்களவை தேர்தல்:திமுக வேட்பாளர் எம்.எம்.அப்துல்லா போட்டியின்றி தேர்வு..

திமுக சார்பில் மாநிலங்களவை தேர்தலில் நிறுத்தப்பட்ட எம்.எம் அப்துல்லா போட்டியின்றி தேர்வானார்.
தமிழகத்தில் 3 மாநிலங்களவை உறுப்பினர் இடங்கள் காலியாக இருக்கும் நிலையில் ஒரு இடத்திற்கு மட்டும் தேர்தல் அறிவிக்கப்பட்டது. இதற்கான வேட்புமனுத் தாக்கலுக்கான கால அவகாசம் முடிந்த நிலையில், சட்டப்பேரவையில் திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் எண்ணிக்கை அதிகமாக இருப்பதால் எம்.எம்.அப்துல்லா எம்.பியாக அறிவிக்கப்பட்டார். மேலும் அதிமுக சார்பில் மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு யாரும் அறிவிக்கப்படாததாலும் இவர் போட்டியின்றி வெற்றி பெற்றுள்ளார்.
1993ஆம் ஆண்டிலிருந்து திமுகவில் பல்வேறு பொறுப்புகளில் இருந்து வருகிறார் எம்.எம்.அப்துல்லா. இவர் வெற்றிபெற்றதற்கான சான்றிதழை தேர்தல் நடத்தும் அலுவலர் சீனிவாசனிடம் இருந்து பெறுகிறார் அப்துல்லா.

ஆப்கானிஸ்தான் ஒரு பார்வை :வழக்கறிஞர் கே.எஸ்.இராதாகிருஷ்ணன்

இலங்கையில் பொருளாதார அவசர நிலை; உணவுப் பஞ்ச அபாயம்: ஒர் அலசல்…

Recent Posts